search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட் கார்னர்"

    வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். #PNBFraud #NiravModi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடந்த ஜனவரி மாதமே வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

    இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளின் விசாரணைக்கு நிரவ் மோடி ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டது.



    இதை ஏற்று நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். நிரவ் மோடியை தங்கள் நாட்டில் பார்த்தால் அவரை பிடிக்கவோ, கைது செய்யவோ வேண்டும் என தனது 192 உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ள இன்டர்போல் அதிகாரிகள், பின்னர் அவரை நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை தொடங்கலாம் எனக்கூறியுள்ளனர்.

    நிரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்துள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளையும் தங்கள் நோட்டீசில் இன்டர்போல் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் நிரவ் மோடிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  #PNBFraud #NiravModi #Tamilnews 
    ×